குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் செயல் மதிய உணவுக்கு பிறகு சற்றே சிரமப் பரிகாரமாக நாளிதழ் படித்துக் கொண்டிருண்தேன். அப்போது நான் பார்த்த சுவையான செய்தி — தமிழக அரசின் உடனடி வனப் பராமரிப்பு மற்றும் மரம் நடும் திட்டம். தற்போது அவர்களின் திட்டம் — அரசு சார் நிலங்கள், தனியார்களின் உபரி நிலங்கள்.

திட்டம் நன்றாகத் தான் உள்ளது. ஆனால் எப்படி அமல் படுத்தப் போகிறார்கள்? அல்லது இதுவும் Vote Bank  பலப்படுத்தும் கொச்சையான சுயநலமான திட்டமா என்று பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.

நான் இவ்வாறு கூறும் காரணம் — Sardar Patel Road, Guindy ஒரு கால கட்டத்தில் அண்ணா சாலை சந்திப்பில் தொடங்கி அடையாறு வரை நிழல் தரும் பூஞ்சோலையாக காட்சி அளிக்கும். இப்போதைய நிலை — பட்டு போன மரம் போல் உள்ளது (வயிற்றெரிச்சல்) — Tender  விடுகிறேன் பேர்வழி என்றும்; சாலை விரிவாக்கம் என்றும் இவர்கள் இயற்கையுடன் நடத்தும் யுத்தம் மகா கண்டனத்திற்கு உரியது.

காலமும் இயற்கையும் தான் இவர்களின் கால் போன போக்கில் போகும் இயற்கை மற்றும் ஜனநாயக விரோத செயல்களுக்கு பதில் தர வேண்டும்.

இணையான தகவல்:  Acute Deforestation